தேனி அருகே சாலை வசதி அமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை…

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பந்துவார்பட்டி மேற்கு தோட்டம் செல்ல சாலை வசதி அமைத்து தர பொது மக்கள் கோரிக்கை. பந்துவார்பட்டி மேற்கு தோட்டத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.பந்துவார்பட்டி காலணி வழியாக தான் மேற்கு தோட்டத்திற்கு செல்ல முடியும். தற்போது மழை பெய்து சாலை குப்பை, மழைநீர் என நிரம்பி காணப்படுகிறது. அவ்வழியாக நடந்தோ இருசக்கர வாகனம் மூலமாக மேற்கு தோட்டத்திற்கு செல்ல முடியவில்லை என பொது மக்கள் பள்ளி மாணவர்கள் கூறி வருகின்றனார்.

பலமுறை திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவியிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிவருகின்றனார்.மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரி நேரில் வந்து பார்வையிட்டு ஒரு பயனுமில்லை. பருவமழை பெய்து வருதால் மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனார்.இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ல முடியவில்லை விரைந்து சாலை அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனார்.

 செய்தி:- பால்பாண்டி, தேனி / ஜெ.அஸ்கர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..