இராமநாதபுரத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்…

இராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர்கள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் பள்ளி தாளாளர் ஸ்டீபன்சன், தலைமை ஆசிரியர் பால் மாறன் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர்.

பின்னர் மாவட்ட கன்வீனர் ரமேஷ், இணை கன்வீனர்கள் பாலமுருகன், ஜீவா, பொருளாளர் குழந்தைச்சாமி, மண்டபம் வட்டார பொறுப்பாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். சிறப்பாக செயல்பட்ட கவுன்சலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply