Home அறிவிப்புகள் மாற்றுதிறனாளிகள் பேருந்தில் பயணிக்க புதிய உத்தரவு ..

மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது ஏற்ப்படும் பல்வேறு சிரமங்களை தீர்க்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடத்தியதன் விளைவாக மாநில போக்குவரத்து ஆணையர் அவர்கள் கடந்த 14.09.18 அன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்கள்.

அதன்படி மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறுவதற்கு இறங்குவதற்கும் வசதியாக அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அனைத்திலும் சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்ப்படுத்தி தர வேண்டும்,

மாற்றி வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் அதாவது இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட TVS Vigo, Scooty Pept வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்த நிலையில்

இனிமேல் எந்த இரு சக்கர வாகனத்தில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆணையை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெற வேண்டுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் P.செல்வநாயகம் மற்றும் பகத்சிங் ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர்.

தகவல்:- அபுபக்கர்சித்திக்

செய்தி:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ், ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!