தேசிய விருது பெற்ற இராமநாதபுரம் ஆட்சியருக்கு முதல்வர் வாழ்த்து….

புதுடில்லி விஞ்ஞான் பவனில் அக்.1ல் நடந்த நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுக்கு கடந்த 2017-18 ஆண்டில் சிறப்பாக சேவை ஆற்றியமைக்காக மதுரை மாவட்டத்திற்கு வயோஷெரஸ்தா சம்மான் 2018 விருது கிடைத்தது.

இந்த விருதை துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடுவிடமிருந்து, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் கொ. வீரராகவ ராவ் பெருமிதமுடன் பெற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சமூக நலம், சத்துணவு திட்ட துறை செயலாளர் மணிவாசன் உடன் உள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..