தேனி மாவட்டத்தில் குடிநீரில் புழு மிதக்கும் அவலம் ..

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு, சீத்தாராம் நகர் உழவர் சந்தை எதிரே கழிவு நீர் அதிக அளவில் தேங்கி பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகம் காணப்படுவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றங்கள் வீசுவதால் பொதுமக்கள் நோய்வாய்ப்படும் சூழல் உள்ளது.

பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் மழைக்கால நோய் தடுப்பு வழிமுறை பின்பற்றாததே காரணம் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குறை கூறுகின்றனர்.பெரியகுளம் நகராட்சி (ம) குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரில் சிறிய அளவிலான புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நகராட்சி ஆணையாளரிடம் புகார் கொடுக்கச் சென்றால் நிலையான ஆணையாளர் இல்லாததால் ஓவர்சீஸ் அவர்களிடம் தொலைபேசியில் புகார் கொடுக்க முற்பட அவரது தொலைபேசி எண்ணும் (9524428441, 9943440 840.) தொடர்பு எல்லைக்கு உட்பட்டதாக இல்லை.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு பிரச்சனைக்கும் மாவட்ட நிர்வாகத்தை நாட வேண்டிய சூழல் உள்ளது.  பெயரளவுக்கு நகராட்சி நிர்வாகம் செயல்பட்டாலும் களப்பணி இன்றி செயல்பட்டு வருவது பொதுமக்கள் பிரச்சனைகளை கண்டும் காணாமல் விட்டு விடுவதாகவே உள்ளது. ஆணையாளர் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் முடங்கி போய் உள்ளதா? என்ற கேள்வி இப்பகுதி பொதுமக்களிடம் எழுகின்றது.

தகவல். A. சாதிக் பாட்சா,நிருபர்,தேனி மாவட்டம்.

ஜெ.அஸ்கர், திண்டுக்கல்.