திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா…

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா 06/10/18 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 32,000க்கும் மேற்ப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தரமான உபகரணங்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

அதன் பலனாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக Alimco என்னும் தனியார் நிறுவனத்திடம் மாவட்ட ஆட்சியர் பேசி மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உபகரணங்கள் தேவைப்படும் பயனாளிகளை தேர்வு செய்யும் முகாமை ஏற்ப்பாடு செய்தார்.

இம்முகாமில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இம்முகாமில் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வநாயகம், மாவட்ட செயலாளர் பகத்சிங் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்:-அபுபக்கர்சித்திக்

செய்தி:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர்

கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

புனித ரமலான் வாழ்த்துக்கள்..