பல வருடங்களுக்கு பிறகு தூர்வாரப்படும் தேனி மாவட்டம் தாமரைகுளம் கண்மாய் – மகிழ்ச்சியில் மக்கள் –

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தாமரைக்குளம் கண்மாயில் இருந்து உபரி நீர் வழிந்தோடும் “தாமரைக்குளம் உபரி நீர் வாய்க்காள்” பல ஆண்டு காலமாக தூர் வாரப்படாததால் புதர் மண்டி இருந்தது. இதனால் தாமரைக் குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்வதற்கு வழி இல்லாமல் இருந்து வந்தது.

இக்கண்மாயில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது வடுகபட்டி, மேல் மங்கலம் வழியே சென்று வராக நதி ஆற்றில் கலக்கும். எதிர்வரும் பருவ மழையை கருத்தில் கொண்டும், நீர் வழித்தடப் பாதையை செம்மைப்படுத்தும் நோக்கிலும் பொதுப்பணித் துறை மற்றும் நீர் வள ஆதாரத்துறையினர் வாய்க்காள் பகுதியை தூர்வாரி சுத்தம் செய்து வருகின்றனர். சாக்கடை கழிவுகள் தேங்கி சுகாதாரமற்ற முறையில், தொற்றுநோய் ஏற்படுத்தும் வகையில் இருந்த இந்த வாய்காள் பகுதியில் பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கண்டு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் , நூலக வாசகர்களும் தங்களது பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி:-  A. சாதிக் பாட்சா, நிருபர், தேனி மாவட்டம். / ஜெ.அஸ்கர், திண்டுக்கல்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..