Home செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி…

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6.10.18 அன்று கல்லூரி கருத்தரங்கு மண்டபத்தில் காலை 10 மணியளவில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் மாணவி பாத்திமா சிபானா இறைவணக்கத்துடன் தொடங்கினார். அதனை தொடர்ந்து திருமதி மு. கோகிலா தேவி தமிழ்த்துறை தலைவர் மற்றும் உதவிபேராசிரியர் வரவேற்புரை வழங்கினார்.

முதல்வர் A.R. நாதிரா பானு கமால் தலைமையுரையினை வழங்கி “எண்ணங்கள் நலமாக இருந்தால் செயல்களும் நலமாக இருக்கும்” மாணவிகளுக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர் S. கீதா மாணிக்க நாச்சியார் அவர்கள் தமிழ்த்துறை தலைவர் மற்றும் முதல்வர் பொறுப்பு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இராமநாதபுரம் அவர்கள்” எண்ணமே வாழ்க்கை” என்ற தலைப்பில் மாணவிகளுக்கு பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைத்தார்.

“வளர்ப்பு என்பது நாம் யாரிடம் வளர்கிறோமோ அவரை போன்றுதாம் குணநலன்கள் இருக்கும் என்றும், சிக்மண்ட் பிராய்டு உடைய மூன்று மனநிலைமைகளைப் பற்றியும் மனிதனின் எண்ணங்கள் எவ்வாறெல்லாம் வெளிப்படுகின்றன என்பதைப்பற்றியும், ” எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெரின்” என்ற குறளுக்கு இணங்க எண்ணியவர் எண்ணியபடி செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாரே அடைவர் என்றும், “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடுப்புக்கு இடும்பை படாஅ தவர்” துன்பம் வந்தபோது அதற்காக வருந்தி கலகங்காதவர் அந்தத்துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர் என்றும், இந்த இரு குறள்களும் டாக்டர் A.P.J அப்துல்கலாம் அவர்களுக்குப் பிடித்தமான குறள் என்றும் மாணவிகளுக்கு உரையாற்றினார்.

இறுதியாக மாணவி M. அபிநயா கணிதவயில் துறை அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே முடிவடைந்து.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!