தேனி பகுதியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா..

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் தனியார் துறையில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணி நியமனத்திற்கான நேரடி தேர்வு நடைபெற்றது, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி, ம, பல்லவி பல்தேவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழக துணை முதல்வர் மாண்புமிகு ஓ, பன்னீர் செல்வம் உத்தரவுகளை வழங்கினார், தனியார் துறையில் மொத்தம் 118 கம்பெனிகள் கலந்து கொண்டன, ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டனர்.

இதில் 159 ஆண்களும், 109 பெண்களும் தேர்வு பெற்று பணி நியமன உத்தரவு பெற்றனர், பணியின் போது உயிர் நீத்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரித் தாளாள் ஜனாப் தர்வேஸ் முகைதீன், தேனி பாராளுமன்ற உறுப்பினர், பார்த்திபன், முறுக்கோடை ராமர், ஆகியோர் கலந்து கொண்டனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கலைச்செல்வன் நன்றி கூறினார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..