இராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை முன்னேற்பாடுகள்..

பருவ மழை அறிவிப்பையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கள்ளிக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களை பாதுகாக்க அதிகாரிகள் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

நாளை (அக்.7) மிக கனமழை பெய்யும் என வானிலை ஆராய்சி மையம் ரெட் அலர்ட் விடுத்தது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்திரவிட்டார். இதன்படி பரமக்குடி அருகே வைகை ஆற்றையொட்டியுள்ள கள்ளிக்கோட்டை கிராமம் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறியப்பட்டு அங்கு ஊரக வளர்ச்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் மழையால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர். அங்குள்ள அரசு பள்ளியில் தங்குவதற்கு போதிய வசதிகள் மற்றும் அவசர காலங்களில் அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் நாளை விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..