ஒழுக்கம், கடின உழைப்பால் வாழ்வில் உன்னத நிலை அடையலாம் – மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை..

இராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளிகள் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ( ராமேஸ்வரம் ) இணைந்து உருவாக்கிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அறிவியம் மையம் மற்றும் புத்தாக்க மையம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார்.

பின்னர் ஆட்சியர், “ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் விரல் நுனியில் உலகம் உள்ளது. வேலை தொடர்பாக எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்துள்ள போதிலும் போட்டியிட்டு வெல்வதில் தான் ஒவ்வொருவரின் திறமை உள்ளது. புத்திசாலித்தனத்தால் மட்டும் ஒருவர் உயர்ந்த நிலைக்கு வந்து விட முடியாது. ஒழுக்கம், கடின உழைப்பால் வாழ்வில் உன்னத நிலை அடைய இயலும். நாம் ஒழுக்கம் உடையவரா என்பதை சமூகம், நம் செயல்கள் தீர்மானிக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,500 பள்ளிகளில் 2.30 லட்சம் மாணவ, மாணவிகளில் நேஷனல் அகாடமி பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் அங்கம் வகிக்கும் நீங்கள் தான் தூதுவர்கள்” என மாணவர்கள் மத்தியில் பேசினார்.

இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா, முதல்வர்கள் ராஜ முத்து, ஜெயலட்சுமி, கல்வி ஆலோசகர் சங்கரலிங்கம், நிர்வாக அலுவலர் கேசவராஜ், அப்துல் கலாம் பவுண்டேஷன் முதன்மை நிர்வாகி ஷேக் சலீம், அறிவியல் மைய உபகரணங்கள் வடிவமைப்பாளர் மிலன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.