பல துருவங்கள் ஒரே இடத்தில் சந்தித்த கீழை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா…

கடந்த செப்டம்பர் 30ம் தேதி சென்னை பி.மெ் கன்வென்சன் ஹாலில் கீழை பதிப்பகத்தின் வி.எஸ் அமீன் எழுதிய ஆன்மீக அரசியல் மற்றும் ஆரூர் புதியவன் என அழைக்கப்படும் ஹாஜா கனி எழுதிய காயம்பட்ட காலங்கள் என்ற இரு நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.

இந்த வெளியீட்டு விழாவிற்கு அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் மாறுபட்ட கருத்துடைய சமுதாய மற்றும் சிந்தனையாளர்கள் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தது, பல துருவங்கள் “வாசிப்பே சுவாசிப்பு” என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என்ற ஒன்றுபட்ட கருத்தே என்பது தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த விழாவை கீழை நியூசின் நிர்வாக உறுப்பினர் மற்றும் சென்னை நீதிமன்ற வழக்கறிஞர் சாலிஹ் ஹுசைன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக கீழை பதிப்பகத்தின் முதன்மை நிர்வாகி மற்றும் கீழை மீடியா அட்வர்டைஸ்மென்ட் நிர்வாக இயக்குனரும், கீழை நியூஸ் நிர்வாக உறுப்பினருமாகிய கீழை.முசம்மில் வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து வெல்ஃபர் பார்டியின் தேசிய பொருளாளர் எஸ.என் சிக்கந்தர் கீழை பதிப்பகத்தின் லோகோவை (இலச்சினை) வெளியிட்டு வரவைற்புரை வழங்கினரர்.

அதைத் தொடர்ந்து தோழர் த.லெனின் மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் ஆனமீக அரசியல் மற்றும் காயம்பட்ட காலங்களில் ஆய்வுரைகளை டாக்டர். கே.வி.எஸ் ஹபீப் முஹம்மத் மற்றும் பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் முறையே வழங்கினர். மேலும் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், தோழர் ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நூல்களின் எழுத்தாளர்கள் வி.எஸ்.முஹம்மத் அமீன் மற்றும் பேரா.முனவைர் ஹாஜா கனி ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

நிகழ்வின் இறுதியாக நன்றியுரையை கீழை.கிதிர் முகைதீன் வழங்கினர். குறுகிய காலத்தில் அழைப்பு விடுத்திருந்தாலும் புத்தகத்தின் மீதும், வாசிப்பின் மீதும் ஆர்வம் மிகுந்த ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..