சௌதி அரேபியா அதிவேக ரயில் வரும் 11ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது…

கடந்த செப்டம்பர் 25ம் தேதி சௌதி அரேபிய மன்னர் சல்மான் அதிவேக ரயில் (Harmain Rail) சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை ஐரோப்பிய நாட்டில் உள்ள ஈரோ ரெயில் சேவைக்கு நிகராக,  அதை விட கூடுதலான பாதுகாப்பு வசதியுடன் கூடிய சேவையாகும். இந்த சேவை பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் 11ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த ரயில் மணிக்கு 300 கி.மீ வேகம் வரை செல்லக் கூடியதாகும். தற்சமயம் மக்காவில் இருந்து மதீனா தரை மார்க்கமாக செல்ல 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த ரயில் சேவை மூலம் 2மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கடந்து விடலாம்.

மேலும் அறிமுக சலுகையாக 11ம் தேதி முதல் இரண்டு மாதத்திற்கு டிக்கட் கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த ரயிலில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு வசதியும் உள்ளது. இதற்கான முன்பதிவை http://www.hhr.sa எனற இணைதளத்தில் பதியலாம்.

Be the first to comment

Leave a Reply