இந்தியாவிலேயே முதன் முறையாக வட்ட வடிவமாக காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை…

இந்தியாவிலேயே முதன் முறையாக வட்ட வடிவமாக காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை. திருச்சி தபால் தலை சேகரிப்பு மையத்தில் விற்பனை துவக்கம் செய்யப்பட்டது.

காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலையினை இந்திய அஞ்சல் துறையினர் வெளியிட்டள்ளனர். இந்தியாவிலேயே முதன் முறையாக வட்ட வடிவிலான அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. மினியேச்சர் அஞ்சல் தலையாக வெளியிட்டதில் ரூ 5,12, 20, 41. 22,25, 25 மதிப்பிலான வட்ட வடிவான தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன. இளம் வயது மகாத்மா காந்தி, ராட்டையில் நூல் நூற்கும் காந்தி, சமாதான புறாவுடன் காந்தி, நோயாளிக்கு உதவும் காந்தி என படங்கள் இடம்பெற்றுள்ளன.

திருச்சி தபால் தலை சேகரிப்பு மையத்தில் விற்பனை துவங்கியது. பொதுமக்களும், மகாத்மா காந்தி 150 ஆண்டை முன்னிட்டு 150 நாட்களில் 150 கண்காட்சியினை நடத்தி வரும் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் தபால் தலை சேகரிப்பு பிரிவு பொறுப்பாளர் ராஜேசிடம் காந்தியடிகள் அஞ்சல் தலை, முதல் நாள் உறையினை ஆர்வமுடன் வாங்கினார்கள்.

செய்தி:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்
கீழை நியூஸ்,( பூதக்கண்ணாடி மாத இதழ் )

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…