இராமநாதபுரத்தில் அதிர்ஷ்டபுறா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு…

செய்யாங்குப்பம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படம் அதிஷ்டப்புறா. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான மாற்றிக் காட்டுவோம் கடந்த 2012ல்  திரைக்கு வந்தது. இரண்டாவது தயாரிப்பான சவுக்கு தோப்பு விரைவில் திரைக்கு வர உள்ளது. மூன்றாவது தயாரிப்பான அதிஷ்டப்புறா படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பு இராமநாதபுரத்தில் நடந்தது.

இதில் அதிஷ்டப்புறா படத்தில் 5 கதாநாயகர்கள், 5 கதாநாயகிகள், 3 வில்லன்கள் களம் இறக்குகிறார் இயக்குனர் ஹாலித். புதுமுகம் மட்டுமின்றி பழைய முகங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். ஆங்கிலம், ஹிந்தி படங்களில் நடித்து வரும் மும்பைச் சேர்ந்த மனிஷ் ஜா அதிஷ்டப்புறாவில் அறிமுக நாயகனாக களம் இறக்கப்பட்டுள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மாநிலத்தவர்கள் களம் காணுவதால் வணிக ரீதியாக சிறப்பாக அமையும் என்ற நோக்கில் இப்படக் குழு அமைந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தை கதை களமாகவும், மும்பை கதை வளரும் இடமாகவும் அதிஷ்டப்புறா கதை அமைகிறது. சமுதாய புரட்சி, புதிய நம்பிக்கை, பாலின வன்முறைகளின் விளைவு, இளைஞர் விழிப்புணர்வு, சமூக குற்றங்களை வெளிப்படுத்தும் படமாக அதிஷ்டப்புறா அமைகிறது. இதன் படப்பிடிப்பு இராமநாதபுரம், மும்பை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.

சமீமா பேகம் தயாரிக்கும் இப்படத்திற்கு  கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு, எடிட்டிங் செய்து அ.ஹாலிது படத்தை இயக்குகிறார். வெள்ளை நதி இசை அமைக்கிறார். ஏவிஎம் ஸ்டூடியோவில் அனைத்து பின்னணி வேலைகள் நடக்க உள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் ஹாளிது, துணை தயாரிப்பாளர் ஆதிலட்சுமி, மும்பை நாயகன் மனிஷா மற்றும் பிரம்ம தேவன், ஆந்திர நாயகி அனுஷியா, இவர்களுடன் பரமக்குடி உதயா , நாமக்கல் ரெக்ஸ் கிருஸ்டிதாஸ், நெடிய மாணிக்கம் மாரிமுத்து, கம்பம் மோகன், திருவாடானை மீரா லெப்பை, கதையன் தங்கச்சாமி, நெடிய மாணிக்கம் ராஜு, ராமநாதபுரம் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

 

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..