இராமநாதபுரம் வீடுகளில் கை வரிசை காட்டிய 3 பேர் கைது …நகை, பணம் மீட்பு..

இராமநாதபுரம் அருகே காரிக்கூட்டத்தைச் சேர்ந்தவர் மைமுன் ராணி. 01. 9.18 இல் இவரது வீட்டை உடைத்து 17 பவுன் நகை திருடு போனது. மேலும் கண்காணிப்பு கேமரா பதிவும் மாயமானது. இராமநாதபுரம் அருகே ராம்நகர் ரமேஷ்வரி. 07. 9.18 மாலை வீட்டை பூட்டிய இவர், மகள் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு சென்றார். 08.09.18 மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து 21 நகை, ரூ.4 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.

இந்நிலையில் 8, 9 மாதங்களில் இவ்விரு திருட்டு உள்பட 5 தொடர் திருட்டுகள் இராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் எல்லைக்குள் நடந்தது. மைமுன் ராணி, ரமேஷ்வரி புகார்படி இன்ஸ்பெக்டர் கலையரசன், சிறப்பு குற்றத் தடுப்பு எஸ்.ஐ., சிவசாமி, எஸ்.ஐ., குகனேஸ்வரன், ஏட்டு ராஜகோபால், போலீசார் வளத்தீஸ்வரன், பட்டாபிராமன், பாண்டியராஜன் தலைமையில் தனிப்படையினர் குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இத்தேடுதல் வேட்டையில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த கும்பல் சிக்கியது. விசாரணையில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டி சத்யா நகர் குமார் 50, முத்துமாரியம்மன் கோயில் தெரு சடையாண்டி 45, நந்தகோபால் தெரு ராஜா 54 ஆகியோர் என தெரிந்தது. ராமநாதபுரத்தில் ஆளில்லா வீடுகளில் திருடியது தெரிந்தது. இவர்களிடமிருந்து 27.5 பவுன் நகை, ரூ.1,24,500 பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா பாராட்டினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…