அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வது தவறில்லை என உச்சநீதிமன்றம் சொல்வது தவறானது – தடா ரஹிம் கண்டன அறிக்கை..வீடியோ பேட்டி..

சமீபகாலமாக உச்சநீதிமன்றம் யாராவது தொடுக்கும் பொதுநல வழக்குகளில் தீர்ப்பு சொல்கிறோம் என  மத , கலாச்சார, பண்பாட்டு குடும்ப உறவுகளை கெடுக்கும் விஷயங்களில் தேவையில்லாமல் தீர்ப்புகள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

377 ஓரினச் சேர்க்கையை தடுக்கும் சட்ட பிரிவைச் நீக்கிவிட்டு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தவறில்லை எனவும் அந்த 377 சட்ட பிரிவைச் நீக்கிவிட்டு பரபரப்பு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அதன்பின் 497 சட்ட பிரிவைச் நீக்கிவிட்டு கள்ள உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று பரபரப்பு தீர்ப்பை  உச்சநீதிமன்றம் வழங்கியது.

தற்போது அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வது தவறில்லை என பரபரப்பு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது .

பெரும்பாலும் முற்போக்கு சிந்தனையாளர்கள் உட்பட பெண் உரிமை போராளிகள்  உச்சநீதிமன்றத்தின் இந்த பரபரப்பு தீர்ப்பை வரவேற்று உள்ளனர் உண்மையில் 497 சட்ட பிரிவைச் நீக்கியதற்கு பெண் உரிமையாளர்கள் கடுமையான கண்டனம் தெரிவிப்பார்கள்  என பார்த்தால் ஆதரிக்கிறார்கள்  சில ஆண்கள் பெண்களை தங்களின் இச்சைகளுக்கு பயன்படுத்தி விட்டு சட்டத்தின் பிடியில் இருந்து சுலபமாக தப்பித்து விடுவார்கள்.

இலை மறைவு காயாக நடந்து வந்த ஓரினச் சேர்க்கை மற்றும் கள்ள உறவு இப்போது சட்ட பாதுகாப்போடு நடப்பதினால் இது மேலும் குடும்ப உறவுகள் பிரச்சினையில் வந்து முடியும் என்பதுதான் உண்மை.

உச்சநீதிமன்றத்தின் இந்த மூன்று  (377 ஓரினச் சேர்க்கை , 497 கள்ள உறவு , அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வது) தீர்ப்புகளையும் மத்திய அரசு அவசர சட்டம் மூலம் உடனே தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகிறோம்  என இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹிம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..