ரயில்வே துறை சார்பாக அரிச்சல் முனை – தனுஷ்கோடி வரை மினி மாரத்தான்…

தேசிய அளவில் நடைபெற்ற இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரசார நிறைவு நாளை முன்னிட்டு சுகாதார பிரச்சார குறு மாரத்தான் ஓட்டம் இராமேஸ்வரத்தில் 02.10.2018 நடைபெற்றது. இராமேஸ்வரம் அரிச்சல்முனையில் இருந்து தனுஷ்கோடி வரை 10 கிலோ மீட்டர் தூர மினி மாரத்தான் ஓட்டத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீனு இட்டியரா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். சுத்தம் சுகாதாரம் இறைவனுக்கு அடுத்தது எனக் கூறிய தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவை யொட் நடந்தது. சுகாதார விழிப்புணர்வு பிரசாரத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்கமாகவும் அமைந்தது.

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், ரயில் பயணிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரயில்வே கோட்ட மேலாளர் தலைமையில் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சுத்தம் சுகாதாரத்தை பேணுவோம் என சுகாதார விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் கோட்ட ரயில்வே மேலாளர் நீனு இட்டியரா பேசுகையில், தூய்மை ரயில் , தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற ரயில்வே துறைக்கு ரயில் உபயோகிப்பாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சுத்தம், சுகாதாரம் மேம்படுத்தப்படும் என்றார். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ஓ.பி.ஷா, முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் ஜி.சாகு உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…