இராமநாதபுரம் மாவட்ட ஐவர் கால்பந்து பனைக்குளம் அணி சாம்பியன்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், குயவன்குடி அருகே குப்பான்வலசை K.V.F.C அணி மற்றும் இளைஞர்கள் சார்பில 3 ஆம் ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 32 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் பனைக்குளம் அணி 2:0 என்ற கோல் கணக்கில் முனியன்வலசை அணியை வென்றது. குப்பான்வலசை அணிக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. சிறப்புபரிசு ரூ10,001 சாத்தான்குளம் ஜமாத் தலைவர் H.காபத்துல்லா, முதலிடம் பிடித்த பனைக்குளம் அணிக்கு ரூ.10,001 மற்றும் கோப்பையை மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் வழங்கினர். இரண்டாம் பரிசு ரூ.7,001 ஐ ஹரிகிருஷ்ணன், மூன்றாம் பரிசு ரூ.5,001 சி.சுப்பிரமணி வழங்கினர்.

குப்பான்வலசை கிராம தலைவர் ராமையா, குயவன்குடி திமுக செயலாளர் முருகபூபதி, அழகன்குளம் திமுக செயலாளர் ஜெமீல், ஒன்றிய மீணவரணி அமைப்பாளர் பஞ்சவர்ணம், பெருங்குளம் ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் உதயகுமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ராஜசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…