பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது..வீடியோ செய்தி..

இன்று முதல் மண்டபம் மற்றும்  சுற்றுவற்றார மீனவர்கள் டீசல்  விலையை கண்டித்தும், இன்னும்  பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில்  மீன்பிடி தொழிலை அழிவில் இருந்து மீட்க உற்பத்தி விலைக்கே மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும்,  இலங்கை கடற்படை சிறைபிடித்து அந்நாட்டு கடலோரப் பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் கரை நிறுத்தப்பட்டுள்ளன, அதற்கு தமிழக அரசு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நல்ல நிலையில் உள்ள விசைப்படகுகளை மீட்டுத் தரவேண்டும். இயக்க முடியாமல் உள்ள படகு களை அரசு ஏற்றுக்கொண்டு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை ஒரு வாரத்தில் அரசு நிறைவேற்றாவிடில் கடலோர மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தல், மாவட்ட தலைநகரங்களில் அக்.8ல் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளுதல், படகு உரிமத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தல், அரசு செவி சாய்க்காவிடில் அனைத்து அரசியல் தலைவர்கள் ஒத்துழைப்புடன் சென்னையில் ஆர்ப்பாட்டம், மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண உடன்படாவிட்டால் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் டில்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மீனவர் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (03.10.18) தொடங்கியது.

வேலை நிறுத்தத்தால் ராமேஸ்வரம . பாம்பன் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டு உள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…