காந்தி நேசித்த விவசாயிகளை காந்தி ஜெயந்தி அன்று தடியால் அடித்து நொறுக்கிய போலீஸ்.. டெல்லியில் பரபரப்பு..

டெல்லியில் பேரணி நடத்துவதற்காக நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோசமாக தாக்கி இருக்கிறார்கள்.

பாஜக அரசுக்கு எதிராக மும்பையில் விவசாயிகள் வரலாறு காணாத பேரணி நடத்தினார்கள். அதை தொடர்ந்து தற்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருக்கிறார்கள். இந்த பேரணி இன்று டெல்லிக்குள் நுழையும் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த பேரணியில் 5000க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கடந்த செப்டம்பர் 23ம் தேதி இந்த பேரணி தொடங்கியது. உத்தரகாண்டின் ஹரித்வாரில் தொடங்கிய இந்த பேரணி நடைபயணமாக டெல்லியில் சென்று முடிவடையும். டெல்லியில் உள்ள கிசான் காட் என்ற பகுதியில் இந்த பேரணி முடிவடையும்.

ஒரு வாரமாக நடக்கும் இந்த பேரணி 02/10/2018 காலை வரை மிகவும் அமைதியாகவே நடந்தது. ஆனால் 02/10/2018 காலை விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்ட போது, மத்திய ரிசர்வ் போலீஸ் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளது.

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

புனித ரமலான் வாழ்த்துக்கள்..