Home செய்திகள் சென்னை விக்டோரியா தொழிற்நுட்ப மையத்தில் நவராத்திரியை முன்னிட்டு கைவினைப்பொருட்கள் மற்றும் கொலுபொம்மைகளின் கண்காட்சி – முழு வீடியோ..

சென்னை விக்டோரியா தொழிற்நுட்ப மையத்தில் நவராத்திரியை முன்னிட்டு கைவினைப்பொருட்கள் மற்றும் கொலுபொம்மைகளின் கண்காட்சி – முழு வீடியோ..

by ஆசிரியர்

சென்னை அண்ணாசாலையில் உள்ள விக்டோரியா தொழிற்நுட்ப மையத்தில் நவராத்திரியை முன்னிட்டு கைவினைப்பொருட்கள் மற்றும் கொலுபொம்மைகளின் விற்பனை கண்காட்சி இன்று (91/10/2018) தொடங்கியது.  பார்வையாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள விக்டோரியா தொழிற்நுட்ப மையம் 1887 முதல் இயங்கி வருகிறது. கைவினைக் கலைஞர்களை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் பொருட்டு இந்த தொழிற்நுட்ப மையம் விக்டோரியா மகாராணி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தொழிற்நுட்ப மையத்தில் கைவினை கலைஞர்களாலும், மாற்றுதிறனாளி கலைஞர்களளாலும் உருவாக்கப்படும் கைவினை பொருட்களை நேரடி கொள்முதல் செய்து இது போன்ற விற்பனை கன்காட்சிகளில் பார்வையாளர்களுக்காக வைக்கப்படுகிறது.

நவராத்திரியை முன்னிட்டு இன்று (01/10/2018) விற்பனை கன்காட்சி தொடங்கியது. இங்கு 15 ரூபாய் முதல் 76 இலட்ச ரூபாய்வ ரையிலான பொருட்கள் இந்த கன்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இது விற்பனை கன்காட்சி பற்றி அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வாதி கூறும் பொழுது “கைவினை பொருட்கள் அழிந்து வரும் நிலையில் நலிவுற்று இருக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் அவர்களின் மேலான்மையின் கீழ் இந்த தொழிற்கூடம் தற்பொழுது இயங்கி வருகிறது. இந்தியா முழுவதிலும் இருந்து கைவினைப்பொருட்களை நேரடி கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகவும்” கூறினார்.

இன்று முதல் துவங்கிய நவராத்திரி விற்பனை கண்காட்சியில் அனைத்துவகையான கொலு பொம்மைகளும் விற்பனை கண்காட்சிக்குகாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் இன்று (01/10/2018) முதல் அக்டோம்பர் 22 வரை இந்த கண்காட்சி நடைப்பெறும் என்றும் கூறினார்.

செய்தி உதவி:- கதிரவன், சென்னை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!