Home செய்திகள் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில் கடத்தி வந்த அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கைது..

புதுச்சேரியில் இருந்து மது பாட்டில் கடத்தி வந்த அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கைது..

by ஆசிரியர்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலை விற்பனைக்காக புதுச்சேரி மது பாட்டில்கள் அரசு பஸ்சில் கடத்தி வரப்படுவதாக இராமநாதபுரம் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில் காவல் கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை அறிவுறுத்தல் படி சிதம்பரத்தில் இருந்து நேற்றிரவு கிளம்பி முதுகுளத்தூர் செல்வதற்காக, இன்று காலை ராமநாதபுரம் வந்த அரசு பஸ்சில் ராமநாதபுரம் மது விலக்கு போலீசார் டிஎன் 63 என் 1696 அரசு பஸ்சில் சோதனை மேற்கொண்டனர். அதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 53 மது பாட்டில்கள் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்தி வந்த அரசு பஸ் கண்டக்டர் கோவிந்தராஜ், டிரைவர் சல்மான் கான் ஆகியோரை கைது  செய்தனர்.

அதே போல் மண்டபம் அருகே வேதாளை வலையர்வாடி பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கிய 400 மதுபாட்டில்களை மண்டபம் போலீசார் பறிமுதல் செய்து வேல்முருகன், அய்யம்பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். கூடுதல் எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையில் மது விலக்கு போலீஸ் தனிப்படை சாயல்குடி பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!