இராமநாதபுர மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அக்டோபர் 2 நடைபெற உள்ள கிராம சபை கூட்டம்..

கிராமப்புறத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலையில்லா கறவை பசு, நவம்பர் மாதத்திற்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கறவை பசு திட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான பயனாளிகள் தேர்வு சிறப்பு கிராம சபை கூட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் காணிக்கூர், கீழச்சாக்குளம் ஊராட்சிகள், நவம்பர் மாதத்திற்கான பயனாளிகள் தேர்வு சிறப்பு கிராம சபை கூட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் எஸ்.வாகைகுளம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பனையடியேந்தல் ஊராட்சிகளில் 02.10.18ல் நடைபெற உள்ளது.

வெள்ளாடுகள் திட்ட நவம்பர் மாத பயனாளிகள் தேர்வு சிறப்பு கிராம சபை கூட்டம் போகலு£ர் ஊராட்சி ஒன்றியம் மஞ்சூர், கடலாடி ஊராட்சி ஒன்றியம் கன்னிராஜபுரம், கருங்குளம், கமுதி ஊராட்சி ஒன்றியம் கீழராமநதி, கொம்பூதி, மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம், பட்டணம்காத்தான், முதுகுளத்து£ர் ஊராட்சி ஒன்றியம் மணலு£ர், மேலகன்னிசேரி, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் குளத்து£ர், மணக்குடி, பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலாய்க்குடி, மோசுக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருங்குடி, காவனக்கோட்டை, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் காவனு£ர், மாடக்கொட்டான், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மாயாகுளம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கொடிபங்கு ஆகிய ஊராட்சிகளில் 02.10.18ல் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம அளவிலான தேர்வு குழு மூலம் அரசு விதிமுறைகள் படி பயனாளிகள் தேர்வு செய்யப்படஉள்ளதால் 02.10.18ல் நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்து பயனடையலாம். பயனாளிகள் தேர்வு பட்டியல் 09.10.18ல் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..