3/10/18ல் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம்..

இராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் அனைத்து விசைப்படகு மீனவர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

மீன்பிடி தொழிலை அழிவில் இருந்து மீட்க உற்பத்தி விலைக்கே மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும், இலங்கை கடற்படை சிறைபிடித்து அந்நாட்டு கடலோரப் பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் கரை நிறுத்தப்பட்டுள்ள தமிழக விசைப்படகுகளுக்கு அரசு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், நல்ல நிலையில் உள்ள விசைப்படகுகளை மீட்டுத் தரவேண்டும், இயக்க முடியாமல் உள்ள படகு களை அரசு ஏற்றுக்கொண்டு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி 3.10.2018ல் படகுகளை கரைகளில் நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அடுத்த கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..