இராமநாதபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்…வீடியோ ..

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாவட்டத்தில் தூய்மையே சேவை என்பதை வலியுறுத்தி 15.9.2018 முதல் 02.10.2018 வரை தூய்மை பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் நகரில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இன்று காலை தொடங்கியது.

இதில் 35 வயதிற்குட்பட்ட மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. போட்டியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நிர்ணயிக்கப்பட்ட எல்லை வரை ஓடி நிறைவு செய்து அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பாராட்டை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலா முத்துமாரி, பரமக்குடி துணை ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்ஸி லீமா அமாலினி, பாக் ஜலசந்தி திட்ட இயக்குநர் மற்றும் மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஜானி டோம் வர்கீஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்லத்துரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க் பால் ஜெயசீலன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பட்டணம்காத்தான் நான்கு வழிச்சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.

35 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் காரைக்குடி லோகேஷ், இராமநாதபுரம் பிரசாத், முதுகுளத்தூர் அருகே சுவாத்தான் வைத்தீஸ் முருகன், பெண்கள் பிரிவில் காரைக்குடி லட்சுமி, காரைக்குடி ஸ்ரீவித்யா, பரமக்குடி மதுமிதா, 35 வயதிற்கு மேற்பட்டோர ஆண்கள்் பிரிவில் இராமநாதபுரம் பால சரவணன், இராமநாதபுரம் நாகநாதன், பட்டணம் காத்தான் தட்சிணாமூர்த்தி, பெண்கள் பிரிவில் பரமக்குடி பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியை மரிய ஆக்னஸ், ஆர் எஸ் மங்கலம் பைஃலின், பெருங்களத்தூர் அழகு ராணி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ் பாபு, சந்திரசேகர்,  ரமேஷ், சுரேஷ், ராஜன், அஜீஸ் கனி, முத்து முருகன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

வெற்றி பெற்றவர்களுக்கு தூய்மையே சேவை இரு வார விழிப்புணர்வு நிறைவு நாள் விழாவில் (அக்.3) பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.