கீழக்கரையில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு பேரணி..

கீழக்கரை ரோட்டரி கிளப், ரெட் கிராஸ் அமைப்பு, செய்யது ஹமீதா அரபி கல்லூரி, மற்றும் கீழக்கரை நகராட்சி இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி இன்று (29/00/2018) நடைபெற்றது.

கீழக்கரை காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை விழா ஏற்பாட்டாளர்களும், அரபி கல்லூரி மாணவர்களும்,  கீழக்கரை கூடுதல் பொறுப்பு DSP பாஸ்கரன் முன்னிலையில்  கொடி அசைத்து துவக்கி வைத்து துவக்கி வைக்கப்பட்டது.

இப்பேரணியில் மாணவர்கள் தூய்மையை பற்றியும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் கோசங்கள் எழுப்பிய படி கீழக்கரை கடற்கரை வரை சென்றனர்.

தகவல்: மக்கள் டீம்