சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா சார்பில் சமூக ஆர்வலர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வட சென்னையில், இன்று 28.9.18 வெள்ளி மாலை 7.00 மணியளவில் அரசியல் கட்சிகள்,அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கு பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி M.A மஹாலில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெரம்பூர் தொகுதி தலைவர்.K.சம்சுதீன், தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாவட்ட தலைவர். A.முஹம்மது ரஃபிக் அவர்கள் கருத்துரை வழங்கினார்.

அவர் தனது உரையின் போது “நாடு முழுவதும் வளர்ச்சி என்று போலி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசால் நம் இந்திய நாடு எந்த வளர்ச்சியும் இதுவரை அடையவில்லை எனவும், மாறாக நாடு முழுவதும் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வு,வேலையின்மை, பாலியல் வன்முறை, குடியுரிமை மறுத்தல், பொய் வழக்குகள் மற்றும் ஜனநாயக படுகொலைகள் போன்ற ஒரு அறவிக்கப்படாத அவசரநிலை பிரகடனத்தையே இந்த மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக, பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் மிக முக்கிய நபர்கள் கலந்து கொண்டு தங்களது ஜனநாயக கருத்துக்களை பதிவு செய்தனர். முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தொகுதி செயற்குழு உறுப்பினர் சேக் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தொகுதி செயலாளர் சப்பிர் பாஷா நிகழ்வின் இறுதியில் நன்றியுரை வழங்கினார்.

தகவல்:-அபுபக்கர்சித்திக்

செய்தி;-அ.சா.அலாவுதீன்.மூத்தநிருபர் கீழை நியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்)