கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பில் GRACE 2018 கூட்டமைப்பு அறிமுக நிகழ்ச்சி..

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் GRACE 2018 கூட்டமைப்பு அறிமுக நிகழ்ச்சி மற்றும் மின்னியல் வர்த்தகம் பற்றிய கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் தலைமையிலும் கல்லூரி நெறியாளர் முனைவர். முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.​கல்லூரி மேலாண்மைத்துறைத் தலைவர் அப்பாஸ் மாலிக் அனைவரையும் வரவேற்றார். மேலாண்மை துறை துணை பேராசிரியர். முனைவர். புரோஸ்கான் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

சிறப்பு விருந்தினராக முனைவர். து. முகைதீன் பாட்சா துறைத் தலைவர் வேல்டெக் ஹைடெக் முனைவர். ரங்கராஜன், முனைவர் சகுந்தலா பொறியியல் கல்லூரி கலந்து கொண்டு என் மின்னியல் வர்த்தகத்தின் முக்கியத்துவம், கைபேசி சந்தையியல் இணையவலைதளத்தின் பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார் மேலாண்மைத் துறை துணைப் பேராசிரியர் முனைவர். சங்கர் மாணவர் கூட்டமைப்பு உறுப்பினர்களை அறிமுகம் செய்து நன்றியுரை வழங்கினார்.

இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மேலாண்மைத் துறை துணைப் பேராசிரியர்கள் குமார், நைமுதீன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.