இராமநாதபுரம் பகுதியில்  மின்னல் தாக்கி 20 ஆடுகள் பலி..

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலான மழை பெய்தது. மேலும் அடிக்கடி பலத்த இடி சத்தத்துடன் மின்னல் தாக்கம் தொடர்ந்தது. இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே ஏ.புனவாசல் சிறுகுடி கிராமத்தில் மழைக்கு ஆடுகள் ஓரிடத்தில் ஒதுங்கின. அங்கு மின்னல் தாக்கியதில் கூட்டமாக நின்ற 20 ஆடுகள் பரிதாபமாக பலியாகின. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம். இது குறித்து வருவாய் துறை, கால்நடை துறை, மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.