பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சாக்கடை தொட்டியில் விழுந்த மாடு..வீடியோ..

கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் இன்று மாலை நேரத்தில் அப்பகுதியில் சென்ற மாடு ஒன்று அப்பகுதியில் சாக்கடை தண்ணீர் வெளியேற்றப்பட்டு முறையாக மூடாமல் இருந்த தொட்டியில் விழுந்து வெளியே வர முடியாமல் சிரமத்துக்குள்ளானது.

பின்னர் ஏர்வாடி தீயணைப்பு படைக்கு தகவல் அனுப்பப்பட்டு மிகுந்த போராட்டத்துக்கு பின் தொட்டி முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டு அம்மாடு மீட்கப்பட்டது. இதே அத்தொட்டியில் குழந்தைகள் தவறி விரிந்திருந்தால் உயிர் சேதம் ஆகியிருக்கும்.  இதுபோன்று சாக்கடை தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள் உடனடியாக மூடிவிட்டால் இது போன்ற விபரீதங்களை தவிர்க்கலாம்.