கீழக்கரையில் வரும் அக்டோபர் முதல் கால்நடை மற்றும் வனவிலங்கு கணக்கெடுப்பு துவக்கம்..

கீழக்கரை நகர் முழுதும் ( வார்டு எண் 1 முதல் 21 வார்டுகளில்) உள்ள கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ( PET ANIMALS & BIRDS ) கணக்கெடுக்கும் பணிகளை வரும் 01.10.18.முதல் தொடங்கப்படுகிறது.

வீடுகள் தோறும் வந்து, வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான ஆடுகள், மாடுகள்,வளர்ப்பு நாய்கள் எண்ணிக்கை குறித்தும் பறவைகள் கோழி, வான்கோழி, புறா, கிளி, லவ் பேர்ட்ஸ், மற்றும் வளர்ப்பு பறவையினங்களின் எண்ணிக்கை பற்றியும், தொடர்பு எண்ணையும், கேட்டறிந்து தெரு நாய்களின் எண்ணிக்கை குறித்தும் கணக்கெடுப்பு பணி கால்நடை ஆய்வாளர் மூலம் நடைபெறும்.

இது மத்திய அரசின் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டமாகும். இதனால் கீழக்கரையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு தேவையான மருந்து மாத்திரைகள், நாய் கடித்தால் வரும் ஃரப்பீஸ் எனும் நோய்களை குணமாக்கவல்ல மருந்துகளும் இலவசமாக கிடைப்பதற்கு வழிவகுப்பதற்கும் இக் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாக கால்நடை ஆய்வாளர் திரு. ஜாஹாங்கீர் அலி தெரிவிக்கிறார். மேலும் விபரம் பெற  94427 56868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்: மக்கள் டீம் :

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..