தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா..வீடியோ..

தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பில் வேப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 20க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் 28/09/18 இன்று நடப்பட்டது. நடப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து வருவதற்கு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும் என ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது. இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம்.

இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.

மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே!  அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இதனைத்தான் தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல சிந்தனை என்றும் கூறுகின்றனர்.

சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களை வெட்டி, காடுகளைக் குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்க வேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும், பயனையும் சிந்திக்கத் தந்தது மிகவும் சரியானதே!

மரம் வளர்ப்போம் !!மழைப் பெறுவோம் !!!

தகவல்:-அபுபக்கர்சித்திக்,

செய்தி தொகுப்பு, அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்
கீழை நியூஸ்(பூதக்கண்ணாடி மாத இதழ்)