கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்..

காலி பணியிடங்களை நிரப்பக் கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு அச மாவட்ட தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வசந்தி முன்னிலை வகித்தார்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடையாததால், அதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும். 35 வகையான பதிவேடுகளை பராமரி ப்பதில் உள்ள சிரமங்களை நீக்கி சுருக்கப் பதிவேடு வழங்க வேண்டும். புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேகர் சிறப்புரையாற்றினார்.
அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஏராளமான கிராம சுகாதார செவிலியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.