Home செய்திகள் அஜ்மிர் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு  எக்ஸ்பிரஸ் – 3 அடுக்கு ஏசி ரயில் சேவை  தொடக்கம்…

அஜ்மிர் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு  எக்ஸ்பிரஸ் – 3 அடுக்கு ஏசி ரயில் சேவை  தொடக்கம்…

by ஆசிரியர்

அஜ்மிர் – ராமேஸ்வரம் – அஜ்மிர் இடையே ஹம்ஸபர் எனும் வாராந்திர எக்ஸ்பிரஸ் (3 அடுக்கு ஏசி) ரயிலை ரயில்வே அமைச்சகம் இயக்க முடிவு செய்தது. இதன்படி சிறப்பு ரயில் சேவை அஜ்மிரில் இன்று (செப்.27) காலை 11:30 மணிக்கு துவக்கி வைக்கப்படுகிறது.

செப்.28 இரவு 9:35 மணிக்கு விஜயவாடா நிறுத்தப்படுகிறது. செப் 29 இரவு 9:00 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைகிறது. செவ்வாய் கிழமை தோறும் ராமேஸ்வரத்தில் இருந்து வாராந்திர எக்ஸ்பிரஸ் (3 அடுக்கு ஏசி) ரயிலாக அஜ்மிருக்கு இயக்கப்படுகிறது. அக் 2ல் (செவ்வாய் கிழமை) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 10:15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் (புதன் கிழமை) மாலை 4:10 மணிக்கு விஜயவாடா செல்கிறது. அங்கிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு வியாழன் இரவு 11:25 மணிக்கு அஜ்மிர் சென்றடைகிறது.

அக்.6ல் (சனிக்கிழமை) அஜ்மிரில் இருந்து இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு, திங்கள் கிழமை காலை 6:50 மணிக்கு விஜயவாடா வருகிறது. அங்கிருந்து 7:00 மணிக்கு கிளம்பி செவ்வாய் கிழமை அதிகாலை 3:15 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைகிறது. பில் வாரா, போபால், நாக்பூர், வாராங்கல், விஜயவாடா, நெல்லூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, மானாமதுரை உள்பட 25 ஸ்டேஷன்களில் நிறுத்தப்படுகிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!