கலைஞரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியால் இறந்தவர் குடும்பத்துக்கு திமுக சார்பில் நிவாரணம்,..

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் மறைவு செய்தி கேட்டு 07.08.2018 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் வளையபூக்குளம் கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜ் மகன் தர்மர் அதிர்ச்சியால் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இந்நிதி காசோலையை திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், வலையபூக்குளம் தர்மர் மனைவி பரஞ்சோதியிடம் தலைமை கழகம் சார்பில் பெறப்பட்ட ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்வில் கமுதி ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுத்துரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் தங்கலட்சுமி, வளையபூக்குளம் ஊராட்சி செயலாளர் தங்கராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாசுதேவன், மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், புதுக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் முருகன், மரக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்ஆதி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாதன், ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் பாரதிதாசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.