கீழக்கரை வீட்டு வரி மறுபரிசீலனை ஆய்வு பணி தொடக்கம்..

கீழக்கரை நகரில் உள்ள காலியிடம், வீடுகள், மற்றும் கடைகளுக்கு விதிக்கும் சொத்துவரி மதிப்பை மறுபரிசீலனை செய்து அதிகப்படுத்தும் பணியை கீழக்கரை நகராட்சியினர் இன்று முதல் தொடங்கி உள்ளனர்.

இதற்காக வீடு தேடி வரி வசூல் செய்ய வரும் நகராட்சி அலுவலர்கள் சொத்தை வரி சுய மதிப்பீட்டு படிவம் ஒன்றை வீடுகள் மற்றும் கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகிறார்கள். அதில் பெயர், முகவரி, வீட்டின் அளவு, கை பேசி எண், மின் இணைப்பு எண் போன்றவற்றை நிரப்பி அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். (தனி நபர் வீடுகளுக்கு வெள்ளை நிற படிவமும், வியாபார தலங்களுக்கு ரோஸ் நிற படிவமும் வழங்கப்படும்)

அதைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட விபரங்கள் அனைத்தும் உண்மைத் தன்மை சரிபார்க்கப்பட்டு நகராட்சி வரி விதிப்பு தொகை மாற்றம் வரும். இதில் சொத்தின் உரிமையாளர் தந்த தகவலை அல்லது அலுவலர்கள் அளித்த தகவலில் சந்தேகம் ஏற்படும் ஆயின் நகராட்சி மேலதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து மறு மதிப்பிடுவார்கள்.

மேலும் சமீபத்தில் வரி விதிப்பு மாற்றம் செய்யப்பட்ட இடங்களுக்கு  இது பொருந்தாது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஊரிலுள்ள ஜமாத், மற்றும் சங்கங்களுக்கு கோரிக்கை வைப்பதாகவும் நகராட்சி ஆணையாளர் தெரிவிக்கிறார்.

தகவல் :மக்கள் டீம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..