அரசு பள்ளிகளை காக்க பிரசாரம்…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே நத்தகுளம் தொடக்கப் பள்ளியில் நம்ம ஊர், நம்ம பள்ளி, அரசுப்பள்ளிகளை பாதுகாப்போம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

சமகல்வி இயக்கம் ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சம கல்வி இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி தலைமை வகித்தார். நத்தகுளம் கிராமத்தலைவர் பால்சாமி முன்னிலை வகித்தார். மூடும் நிலையில் உள்ள அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு, பள்ளிகளின் தேவைகள், கிராமப்புற தொடக்கப்பள்ளிகளின் மேம்பாடு, தனியார் பள்ளிகளின் வணிக நோக்கம்., குறைந்த எண்ணிக்கை மாணவர்கள் பயிலும் பள்ளிகளை மூடுவதை தடுத்தல் குறித்தும் தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்களிடையே கருத்துரை வழங்கினர். கிராம பள்ளிகளை பாதுகாப்ப உறுதிமொழி எடுத்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி, மாவட்ட பனைத்தொழிலாளர் சங்கத் தலைவர் இன்பவதி, தன்னார்வலர்கள் வாழமுத்து, ராஜாமணி, கனகவள்ளி, கிராம மக்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பங்கேற்றனர். மரியஸ்டெல்லா நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.