Home செய்திகள் பழனி பள்ளிவாசலுக்கு சொந்தமான கடையை தாரை வார்த்த வக்ஃபு வாரிய அதிகாரிகளை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

பழனி பள்ளிவாசலுக்கு சொந்தமான கடையை தாரை வார்த்த வக்ஃபு வாரிய அதிகாரிகளை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

பழனி பள்ளிவாசலுக்கு சொந்தமான கடையை நீதிமன்ற உத்தரவை மறைத்து தனியாருக்கு பெரும் தொகையை வாங்கி பூட்டைத் திறந்து கொடுத்த வக்ஃபு வாரிய அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பழனி பேருந்து நிலையம் எதிரே இஸ்லாமியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் தமுமுக நகரத் தலைவர் ஜாபர் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிப்பு.

பழனி காந்தி ரோட்டில் அமைந்துள்ள பழனி டவுன் முஸ்லீம் தர்மபரிபாலன சங்கத்திற்கு பாதிக்கப்பட்ட வண்டிப்பேட்டை வளாகத்தில் (கடை எண் 79) ஜவுளிக்கடை நடத்தி வரும் வாடகைதாரர் மூன்றாம் நபருக்கு (பகுடிக்கு) பெரும் தொகையை பெற்றுக்கொண்டு கடையை மூன்றாம் நபர் அனுபவித்துக் கொள்ள ஒப்புதல் அளித்துவிட்டு நடத்தி வந்த ஜவுளிக்கடையை காலி செய்துவிட்டார்.

தகவலறிந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் உதவியுடன் ஜமாத்தார்கள் உடன் கடையை பூட்டி சீல் வைத்த பின் தனியாருக்கு ஆதரவாக பெரும் தொகையை பெற்றுக்கொண்ட வக்பு வாரிய அதிகாரிகள் இணைந்து கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மறைத்து உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஆணை பெற்று காவல்துறை பாதுகாப்புடன் பூட்டை உடைத்து கடை திறந்துள்ளதை கண்டித்தும்

வக்ஃபோர்டு உறுப்பினர்களையும் சிறுபான்மை பிரிவு அமைச்சர்களகயும் கையில் போட்டுக் கொண்டு கடையை மீண்டும் திறந்தனர் இதனால் அனைத்து முஸ்லீம் இயக்கங்கள் சார்பாக வக்ஃபோர்டை கண்டித்தும் சிறுபான்மை பிரிவு அமைச்சர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்நிகழ்வில் ஜாபர் தலைமை தாங்கினார். சிறப்புரையாக சாந்து முகமது,Cகைசர்,பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழனி செய்தியாளர்:-ரியாஸ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!