கள்ளத்தோணியில் இலங்கைக்கு செல்ல முயன்ற மூவர் கைது..

இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கொழும்பு பகுதியைச்சேர்ந்தவர் ரமணி (42). சுற்றுலா விசாவில் இந்தியா வந்த இவர் திருச்சியில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை, தனுஷ்கோடி வழியாக மர்மப்படகில் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்றார். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஏஜன்ட் ஆல்வின், திருச்சியைச்சேர்ந்த கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேரை ராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.