இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி மற்றும் அரிமா சங்கம் இணைந்து  ரத்த தான முகாம்..

இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிகள், நூற்றாண்டு அரிமா சங்கம் இணைந்து பெருங்குளத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித் தலைமை தாங்கினார். அரிமா சங்க செயலாளரும், பேராசிரியருமான ஜெய்னி பிரான்சினா வரவேற்றார்.

பட்டயத் தலைவர் மணிமொழி, பொருளாளர் சந்திரசேகர், பேராசிரியர் முருகேசன், அரிமா சங்க முன்னாள் நிர்வாகி ரவிச்சந்திரன். முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் பத்துல் ராணி பாத்திமா தலைமையில் மருத்துவ குழுவினர் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் 60 பேரிடம் ரத்தம் சேகரித்தனர். ஆசிரியர் அய்யப்பன் ஏற்பாடுகளை செய்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.