மக்கள் மறந்தாலும், தடுத்தாலும் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆஷரா எனும் முஹர்ரம்..சாமானியனின் யதார்த்த கருத்து வீடியோவாக..

கீழக்கரை வடக்குத்தெருவில் அமைத்துள்ள கொந்தக்கருணை அப்பா தர்ஹாவில் முஹர்ரம் 10 ஆம் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில்  பல் வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் பேற்பட்டோர் கலந்து கொண்டனர். இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் 10 இரவுகளில் பல் வேறு நிகழ்ச்சிகள் நடப்பது ஒரு வழமையாக இருந்து வந்தது.

இந்நிகழ்ச்சியை கத்தி குத்து ராத்திரி என்று கூட சொல்வதுண்டு. இதற்காக பல் வேறு பகுதிகளில் இருந்து பக்கீர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இதில் இரும்பு கம்பியால் நாக்கை குத்துவது, தப்ஸீர் கொட்டு அடித்தல், வாள் நடனம் போன்ற பல் வேறு நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு.

ஆனால் அது காலப்போக்கில் மறைந்து விட்ட நிலையில் தற்போது கொல்லுக்கட்டையில் விளக்கு ஏற்றுவது, வாழைப்பழம் வழங்குதல் போன்றவை நேர்ச்சையாக செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்த நாளை துக்க நாளாக அனுசரணை செய்வது இஸ்லாமிய வழிமுறைக்கு முறணான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததோடு, அதை வைக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளில் நோன்பு வைப்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

எகிப்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்து நானே மிகப்பெரிய கடவுள் என்று கூறி பல அக்கிரமங்களை புரிந்த ஒரு கொடுங்கோல் அரசனான பிர்அவ்னைக் தண்ணீரில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றிய நாள் தான் ஆஷரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.

பிர்அவ்னின் கொடூர ஆட்சியில் பாதிக்கப்பட்ட நேரத்தில், மூஸா (அலை) என்ற இறைத்தூதரின் தலைமையில், எகிப்தை விட்டு வெளியேறுவதற்காக புறப்பட்டு வந்த இஸ்ரவேல் மக்களை, அல்லாஹ் தன் வல்லமையால் மிக அற்புதமாக தண்ணீரை பிளந்து காப்பாற்றிய ஒரு முக்கியமான சரித்திர நிகழ்வு முஹர்ரம் மாதத்தில் நடந்ததை நாம் யாரும் மறக்க முடியாது.

ஒரு முஸ்லீம் என்றுமே மறக்க கூடாத அந்த அற்புத நிகழ்வை, மறைப்பதற்காக யூதர்களின் கூட்டு சதியால் உருவாக்கப்பட்டது தான், தற்போது கர்பலாவின் பெயரால் படுகளம் என்ற பெயரில் நடைபெற்றுவரும் படு கேவலமான இந்த முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்.

கர்பலா என்ற போரில் நடந்த துயரச்சம்பவங்களை கூறி தற்போது புனிதமான முஹர்ரம் மாதத்தை கேவலப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருட முஹர்ரம் மாதத்திலும் இஸ்லாத்திற்கு கடுகளவும் சம்மந்தமில்லாத ஏராளமான அனாச்சாரங்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்பதை மற்றொரு பிரிவினர் ஆதங்கத்தோடு கூறுகிறார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..