மண்டபம் அம்பலகாரத் தெரு கூனி மாரி அம்மன் கோயில் 172 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அம்பலகாரத் தெரு கூனி மாரி அம்மன் கோயில் 172 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா 09/09/18 முத்தெடுப்பு, 11/09/18 காப்புடன் துவங்கியது. இதனையொட்டி 16/9/18 இரவு வரை வாஸ்தாபி செந்திவேல குழுவினரின் ஒயிலாட்டம் நடைபெற்றது.

இவ்விழா நாளன்று மாலை வாண வேடிக்கைகள் வானில் வர்ண ஜாலம் .காட்ட அம்மன் கரகம் கட்ட வடக்கு கடற்கரை சென்றது. இரவு தாரை தப்பட்டம் முழங்க அம்மன் கரகம் பக்தர்கள் புடைசூழ மின்னொளியில் கோயில் வந்தடைந்தது. 19/09/2018 காலை 7.30 மணி அளவில் அம்மன் கரகம் பக்தர்கள் தரிசனத்திற்காக வீதியுலா சென்றது. இதன் பிறகு பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மாலையில் பாரி சுமந்த பெண்களுடன் அம்மன் கரகம் வடக்கு கடற்கரை சென்று பெண்கள் கும்மியாட்டம், வாலிபர்கள் ஒயிலாட்டத்துடன் முளைப்பாரி கடலில் கரைக்கப்பட்டது. கோயில் கமிட்டி நிர்வாகிகள் செல்வராஜ், ஷாபு ராஜேந்திரன், ரமேஷ், தண்டல் முருகானந்தம், செல்வக்குமார், ஜடாமுனி (எ) ராஜேந்திரன், நம்புவேல், முன்னாள் கவுன்சிலர் முனியசாமி, வாஸ்தாபி செந்திவேல், ராஜ் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக செப்.25 மாலை குளுமை பொங்கல் விழா நடக்கிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..