போலந்து நாடு – சுயக்கட்டுபாட்டுக்கும், பழைமை மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் ஒரு முன்னுதாரணம்…பிரத்யேக வீடியோ மற்றும் புகைப்படம்…

போலந்து நாடு, இந்தியாவில் இருந்து 6,200 கிலோ மீட்டர் தொலைவில் 2004ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைந்த ஒரு நாடாகும்.  இன்னும் இந்நாட்டில் ஐரோப்பிய நாடு பணமான யூரோ இல்லாமல் அந்நாட்டு பணமான பாலிஸ் நோட்டே உபயோகத்தில் உள்ளது, ஆகையால் இங்கு மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளை விட விலைவாசி குறைவாகவே உள்ளது.

இந்நாடு மொத்தம் 120,300 சதுர கிலோ  மீட்டர் நில அளவுடன் மொத்தம் 38,433,600 மக்கள் தொகையை கொண்டதாகும்.  இங்கு 87 சதவீதம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்களே உள்ளனர்.  இந்த நாடு ஜெர்மனி மற்றும் ரஷ்ய நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது.

போலந்து நாடு இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி நாட்டவரால் போலந்தின் தலைநகரமான வார்சா நகர் ஒட்டு மொத்தமாக சூறையாடப்பட்டு நாசம் செய்யப்பட்டது.  பின்னர் கம்யூனிச ஆட்சியாளர்களால் பழமை மாறாமல் அப்பகுதி அதே போல் வடிவமைக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2000ம் ஆண்டுகளில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

போலந்து நாட்டு மக்கள் தங்களுடைய வேலையை தானே செய்யக்கூடியவர்களாகவும், சக மனிதர்களை நம்பக்கூடியவர்களாகவும் உள்ளனர்.  உதாரணமாக பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்ப என ஊழியர் கிடையாது, அவர்களே நிரப்புகிறார்கள், அதைவிட அவர்களே  தொகை எவ்வளவு என்பதை காசாளரிடம் தெரிவித்து செலுத்தி வருகிறார்கள்.  அதே போல் வணிக வளாகங்களுக்கு சென்றாலும், பொருளை எடுத்து வைக்க பிரத்யேக நபர்கள் கிடையாது, அம்மக்களே தாங்கள் கொண்டு செல்லும் கைபையில் எடுத்து கொண்டு வருகிறார்கள்.  அதுபோல் அனைத்து துறைகளிலும் போலந்து நாட்டு மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அதே போல் அரசாங்கமும் சுற்றுப்புற சூழல் மற்றும் மக்களின் தலன் மீது அதிக கவனம் செலுத்துகிறது. அதற்கு உதாரணம் அங்கு பல நாடுகளையும் இணைக்கும் இரண்டு புறவழி சாலைகள் உள்ளது. இரண்டு சாலைகளும் பல மக்கள் வசிக்கும் பகுதியை கடந்து செல்வதால் சாலையில் இரண்டு பக்கமும் மக்கள் வாகனம் எழுப்பும் சத்தத்தால் பாதிக்க கூடாது என இரண்டு பக்கமும் தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது.

இன்று வரை போலந்து நாட்டில் விவசாயத்திற்கு மிக முக்கியத்துவம். வழங்கப்படுகிறது.  இந்நாட்டிற்கான அனைத்து காய்கறிகளும் அந்நாட்டிலேயே விளைவிக்கப்படுகிறது. மேலும் இந்நாட்டின் சிறப்பு இங்கு இயற்கையாக விளைவிக்கப்படும் ஆப்பிள் பழங்கள்.

நம் நாட்டில் ஏரி, குளங்கள் என அழித்து ஒரு அங்குலம் இடம் கிடைத்தாலும் பட்டா போட்டு விற்கும் சூழலில் இன்று வரை இயற்கையை பேணி, இயற்கையோடு சேர்ந்து வாழும் போலந்து மக்களிடம் நமக்கு படிப்பினையும் இருக்கிறது, அவர்கள் பாராட்ட கூடியவர்கள்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..