கொடைக்கானலில் வானுயர்ந்த மரங்கள்! கண்ணையும், மனதையும் மயக்கும் அழகான ஆபத்து! வீடியோ..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துள்ள ஆங்கிலத்தில் யூக்காலிப்டஸ் என்றழைக்கப்படும் குங்குலிய மரங்கள்.  இதன் இலைகள் நீள நீளமாக பசுமை நிறத்தில் அடர்த்தியாக நல்ல மணத்துடன் காண்பவர்கள் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவாக இருக்கும். அழகான அதன்தோற்றமும் அதன் மூலம் தயாரிக்கப்படும் தைலமும் மட்டுமே நாம் அறிந்தது.

ஆனால் இதன் பின்னே மறைந்துள்ள ஆபத்தை நாம் யாருமே அறியவில்லை நாம் அறியாத இந்த ஆபத்தை பற்றி கொடைக்கானலில் உள்ள ஸ்மைல் கூட்டமைப்பு தலைவர் அப்பாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடைக்கானலில் 1940ம் ஆண்டு வரை புல்வெளிகளும்,மலைஇடுக்குகளில் பல்லுயிர் வாழ ஏதுவாக இருக்கும் சோலைக்காடுகள் மட்டுமே இருந்தன.வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு மரங்களான குங்குலியம் (eucalyptus )சீகை (wattle ) பைன் (pine )ஆகிய மூன்று விதமான மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் வியாபார நோக்கத்தோடு பேப்பர் தயாரிக்க,உடைகளுக்கான சாயம் தயாரிக்க மற்றும் லாரிகள் கட்டும் பலகைகள் தயாரிக்க விதையிடப்பட்டு நடப்பட்டன.ஆனால் காலபோக்கில் பேப்பர் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த மரங்களை எடுப்பதை நிறுத்திவிட்டதால் இந்த மரங்கள் களையாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் வீரியமாக வளரத்துவங்கின.இந்த மரங்கள் வேறு எந்த வகையான பல்லுயிர்களும் தாவரங்களும் வளர விடாமல் தடுத்தும், நிலத்தடி நீர் ஆதாரங்களை தடுத்தும் வருகிறது. எனவே இந்த அந்நிய மரங்களை அகற்றி கொடைக்கானலின் இயற்கை வளங்கலான புல்வெளிகளையும் சோலை மரங்களையும் வளர்த்தால் மட்டுமே இயற்கை பாதுகாக்கப்படும் தமிழக அரசு இந்த விசயத்தில் கவனம் செலுத்தி வனப்பகுதிகளுக்குள் உள்ள இந்த அந்நிய மரங்களை அகற்ற அனுமதி அளிக்கவேண்டும் என்று கூறினார்.

செய்தி:-ஜெ.அஸ்கர், திண்டுக்கல்- ரஜினி, கீழைநியூஸ்  கொடைக்கானல்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..