முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2022 ல் செயற்கைகோள் விண்வெளியில் செலுத்த தேர்வு மற்றும் சிறந்த கல்லூரிக்கான விருது..

அகில இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு கருத்தரங்கு மாநாடு மற்றும் செயற்கைகோள் வடிவமைத்து அதனை விண்வெளியில் செலுத்துவது தொடர்பான கருத்தரங்கு பெங்களுருவில் நடைபெற்றது. அதில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு தலைசிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருதும்இ சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2022-ல் செயற்கைகோள் வடிவமைத்து விண்ணில் செலுத்த தேர்வும் செய்யப்பட்டனர்.

பெங்களுருவில் முதல் நாள் மாநாட்டிற்குஇ அகில இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு தலைவர் முனைவர் எல்.வி. முரளி கிருஷ்ண ரெட்டி தலைமையிலும்இ சென்னை, அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.எம். வாசகம் மற்றும் இந்திய பல்கலைகழகங்கள் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் சஞ்சய் ஷெட்டி முன்னிலையிலும் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கர்நாடக முதலமைச்சர் மாண்புமிகு ஹச். டி. குமாரசாமி கலந்து கொண்டு தலைசிறந்த பல்கலைகழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான விருதையும், செயற்கை கோள் விண்ணில் செலுத்துவது பற்றிய கருத்தரங்கு மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் அகில இந்திய அளவில் 6 தலைசிறந்த நிறுவனங்கள் பொறியியல் கல்லூரி தேர்வு செய்ததில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முன்னிலையில் உயர்திரு முனைவர் மயில்சாமி அண்ணாதுரை முன்னால் இயக்குனரிடமிருந்து கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் விருதை பெற்றுக் கொண்டார். மேலும் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2022ல் செயற்கைகோள் விண்வெளியில் செலுத்துவதற்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இரண்டாம் நாள் மாநாட்டிற்கு பத்ம ஸ்ரீ இஸ்ரோ பேராசிரியர் முனைவர் Y.S ராஜன் தலைமையிலும் பெங்களுரு இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழக முன்னாள் தலைவர் பேராசிரியர் பி. தத்தகுரு முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இணை இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வைளி ஆராய்ச்சி மையம் திருவனந்தபுரம் முனைவர். எம்.எஸ் ஜெயசந்திரன், தனது உரையில் ISROவின் சாதனைகள், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைகோள்களின் பயன்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கனடாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி மிலிந்த் பிம்பிரிகர் மாணவர்களின் பங்கேற்பு பற்றி உரையாற்றினார். மாணவர்கள் நாசா, இஎஸ்ஏ உடன் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளில் பங்கேற்பதற்கு உரிய வாய்ப்புகளையும் மேலும் பல்வேறு விதமான செயற்கை கோள்களின் கட்டுமாளத்தில் மாணவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை விளக்கி கூறினார்.

வேலூர் தொழில்நுட்பக்கழக இயக்குநர் முனைவர் ஜி.பி. கணபதி விண்வெளி அமைப்பான UNISECஇன் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். டிவைன் ஆராய்ச்சி மைய இணை நிறுவனர் திரு. சுதிப்கர் நுண்ணறிவு செயற்கை கோளின் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்களிப்பை விளக்கினார் மற்றும் பெங்களுரு இந்திய வானவியல் ஆரய்ச்சிய மைய முன்னாள் இயக்குநர் முனைவர். மயில்சாமி அண்ணாதுரை மைக்ரோ செயற்கை கோள் , நானோ செயற்கைகோள் மற்றும் பைக்கோ செயற்கைகோள்களை குறைந்த எடையுடன் வடிவமைத்து அதனை விண்வெளியில் செலுத்தி மக்களுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிவித்தல், இந்திய மண்ணில் உள்ள கனிம வளங்களின் சிறப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் பற்றி எவ்வாறு அறிந்து கொள்கிறோம் என்பது தொடர்பான கருத்துக்களை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நாசா விஞ்ஞானிகள், நார்வேஇ கனடா, துருக்கி போன்ற நாடுகளைச் சார்ந்த விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் அகில இந்திய அளவில் பல்வேறு பல்கலைகழகங்கள், பொறியியல் துறை சார்ந்த பேராசிரியர்கள், அறிஞர்கள், மாணவர்கள் 3000-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். அதில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி சார்பாக துறைத்தலைவர்கள்இ வானூர்தி துறைத்தலைவர் ஹாரூன் ரசீத், இயந்திரவியல் துறைத்தலைவர். மயில்வேல்நாதன், கணினி துறைத்தலைவர் கார்த்திகேயன், மின்னியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைத் தலைவர் ஷேக் அராபத், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் பூபாலன் மற்றும் 20 மாணவர்களுடன் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..