Home செய்திகள் அரியமான் மற்றும் சீனியப்பா தர்கா சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி…

அரியமான் மற்றும் சீனியப்பா தர்கா சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி…

by ஆசிரியர்

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு 15.09.2018 அன்று சனிக்கிழமை உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரை மற்றும் சீனியப்பா தர்கா கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் பணிகளை மதுரை காமராஐர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறையினர் மேற்கொண்டனர்.

அரியமான் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியினை டி.ஐ.ஜி.காமினி தொடங்கி வைத்தார் கமாண்டன்ட் வெங்கடேஷ், சுற்றுச்சூழல்  ஆர்வலர் வாசுதேவ், விவேகானந்தா கேந்திர பொறுப்பாளர் சரசுவதி, மீன்துறை உதவி இயக்குனர் கோபிநாத் உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் பூமா, மண்டபம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள், முகமது சதக் ஹமீது கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் முகமது சதக் ஹமீது கல்லூரி முதல்வர் நாதிரா பானு கமால் மாணவர்களிடையே பிளாஸ்டிக்கின் தீமையை எடுத்துரைத்து அதற்கான மாற்றுப்பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து முகமது சதக் ஹமீது கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவர்கள், கடலோர காவல் படை வீரர்கள் பலர் கலந்து கொண்டு கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அகற்றி சுத்தம் செய்தனர்.

சீனியப்பா தர்கா நிகழ்ச்சியை பல்கலைக்கழக ஆற்றல் புலத்தின் தலைவர் பேராசிரியர் முத்துச்செழியன் தொடங்கி வைத்தார். மன்னார் வளைகுடா பகுதி சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். மத்திய கடல்வாழ் மீன்கள் ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஜெயக்குமார், அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் கோபிநாதன், செய்யது ஹமீதியா கல்லூரி முதல்வர் ரஜபுதீன், முகமது சதக் ஹமீது கல்லூரி முதல்வர் நாதிரா பானு கமால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் செய்யது அம்மாள், செய்யது ஹமீதியா, முகமது சதக் ஹமீது, தாசீம் பீவி அப்துல் காதர், சேதுபதி கலை அறிவியல் கல்லூரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு கடற்கரை பகுதியை சுத்தம் செய்தனர். முகமது சதக் ஹமீது மகளிர் கல்லூரி தொழில்நுடபத்துறை தலைவர் P.பிரியங்கா மற்றும் தமிழ்த்துறை தலைவர் மு.கோகிலாதேவி கலந்து கொண்டனர். பேராசிரியர் ராமகிருட்டிணன் நன்றி கூறினார். இதில் 31 சதவீதம் பிளாஸ்டிக்கும், 21 சதவீதம் கண்ணாடி பாட்டில்களும் அகற்றப்பட்டன.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!