கீழக்கரை நகராட்சி மற்றும் சதக் பாலிடெக்னிக் நிர்வாகம் இணைந்து சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்..

கீழக்கரையில் இன்று (18/09/2018) நகராட்சி சுகாதாரப் பிரிவு ஒப்பந்த தொழிலாளர்கள், முகம்மது சதக் பாலிடெக்னிக் NCC மாணவர்கள் இணைந்து தூய்மை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு  நகராட்சி ஆணையாளர் தனலெட்சுமி அவர்கள், மற்றும் நகராட்சி அதிகாரிகள் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் மற்றும் NCC அணி தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதன் பின் மாணவர்களும், நகராட்சி ஊழியர்களும் இரு பிரிவாக பிரிந்து, சின்னக்கடை தெருவில் ஒவ்வொரு வீடாக சென்று குப்பைகளை தெருவில் வீசினால் முதல் முறை ₹.100/ முதல் ₹.500/ வரை அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் கூடிய விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.

தகவல்: மக்கள் டீம் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..