மதுரை அழகப்பா நகரில் ஆறு மாதங்களாக வீணாகும் குடி நீர்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலையில் அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆறு மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறு போல நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை எந்த ஒரு அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை, பல அதிகாரிகள் அந்த வழியாகத்தான் சென்று வருகிறார்கள். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக யாரும் கண்டு கொள்ளவில்லை.

குடிநீர் சிக்கனம் தேவை என அரசு மட்டும் விளம்பரம் செய்தால் போதாது, இதை அரசாங்கமும் பின் படுத்த வேண்டும். நீரின்றி அமையாது உலகு என வள்ளுவன் வாக்கு, இது அரசாங்க அதிகாரிகளுக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை.

பலமுறை புகார் கொடுத்தும் குதிரைக்கு கங்கணம் கட்டியது ஒரு புறம் மட்டும் பார்வையை  செலுத்தி செல்லும் அதிகாரிகளை என்ன சொல்வது என்று தெரியவில்லை. பொது மக்கள் ஆங்காங்கே குடிநீருக்கு அலையும் அவல நிலையில் இங்கு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது இப்போதாவது உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..