தேவிபட்டினத்தில் உலக கடற்கரை தின சிறப்பு நிகழ்ச்சி..

கடற்கரை மாசு படுதலை நீக்கி கடற்கரையைப் பாதுகாக்கும் நோக்கோடு ஆண்டு தோறும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை உலகக் கடற்கரை தினம் கடை பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 15.9.18 அன்று தேவிபட்டினத்தில் மீன்வளத்துறை, கடல் காவல் துறை, தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் தேசிய பசுமைப்படை, ஜுனியர் ரெட் கிராடஸ் மாணவ மாணவியர் கடற்கரை தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவிபட்டினம் கடற்பகுதியைத் தூய்மைப் படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் வ.அப்துல் காதர் ஜெய்லானி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பெருமாள், கடல் பகுதிக் காவல்துறை சார்பு ஆய்வாளர் அய்யானார், மீன்வள்த்துறை ஆய்வாளர் ஆரோக்கியசாமி, விவேகானந்தா வித்யாலயா முதல்வர் பா.தீனதயாளன் மற்றும் மீனவ மக்களும் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..